தேர்தல் பத்திர வழக்கு

Article Title: தேர்தல் பத்திர வழக்கு

11-10-2023

Indian Polity Current Affairs Analysis

தேர்தல் பத்திரத் திட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை அக்டோபர் 31-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

கேள்விக்குரிய பிரச்சினைகள்:

அரசியல் கட்சிகளுக்கு வெளிப்படை தன்மையற்ற நன்கொடைகளை சட்டப்பூர்வமாக்குதல்

அரசியல் கட்சிகள் பெரும் நிதி குறித்து குடிமக்களின் தகவல் அறியும் உரிமையை மீறுதல்.

அரசியலமைப்பு விதிகளை மீறுதல்:

சரத்து 19- பேச்சு மற்றும் கருத்துரிமை

சரத்து 14- சட்டத்தின் முன் அனைவரும் சமம்

சரத்து 21 – வாழ்வதற்கான உரிமையும் சுதந்திரமும்

தேர்தல் பத்திரங்கள்:

அறிமுகம் : 2017-18-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் நிதி மசோதா தாக்கல்

இது மாநிலங்களவையை மீறி பண மசோதாவாக நிறைவேற்றப்பட்டது.

நடைமுறைப்படுத்தப்பட்டது: 2018

சர்ச்சைக்குரிய தேர்தல் பத்திரங்கள்:

வெளிப் படைதன்மை :

பத்திரங்களை வாங்குபவர் பெயர் அதில் குறிப்பிடபடாது

பின்னர் வாங்குபவர் பத்திரங்களை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மாற்றலாம்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் கீழ் வெளியிடுவதில் இருந்து விலக்கு

நிதிச் சட்டம், 2016, வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம், 2010 இல் திருத்தம் செய்துள்ளது.

இந்தியாவில் துணை நிறுவனங்களைக் கொண்ட வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு நிதியளிக்க இது அனுமதிக்கிறது.

தாக்கம்:

இந்திய அரசியலையும் ஜனநாயகத்தையும் சர்வதேச தாக்கங்களுக்கு உடபடுத்துதல்

மற்றொரு வழக்கில், 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, தேர்தல் பத்திர நிதி மசோதாவை பண மசோதாவாக நிறைவேற்றியதன் செல்லுபடியை விசாரித்து வருகிறது.